பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்படும் என நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேட்டி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என டிஆர் பாலு அவர்களும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் கூட்டணிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என துரைமுருகன் அவர்களும் பேட்டி அளித்தது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக்கப்பட்டு விட்டது என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பிரிவு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் அவர்கள் ’பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடக்கிறது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியுடன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார் என்பது தெரிந்ததே. இதனால் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமையும் என்றும் அதில் மக்கள் நீதி மையம் கட்சியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout