முக்கால் மணி நேர சபாஷ் நாயுடு : கமல்

  • IndiaGlitz, [Friday,July 08 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது என்பதையும் இந்த படத்தின் இயக்குனர் பொறுப்பையும் கமலே ஏற்றுக்கொண்டார் என்பதும் தெரிந்ததே. 'சபாஷ் நாயுடு' படக்குழுவினர் தற்போது நாடு திரும்பி, அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் 42 நிமிட காட்சிகளின் எடிட்டிங் பணிகளும், ஸ்ருதிஹாசனின் ஒரு பாடலின் எடிட்டிங் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் கமல் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேர படத்தின் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
முதல்முறையாக கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்பட பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் தயாராகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அழகி' நடிகையின் மறுப்பு அறிவிப்பு

தங்கர்பச்சான் இயக்கிய 'அழகி' உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகை நந்திதாதாஸ் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பெண் இயக்குனர் குட்டிரேவதி...

தனுஷூக்கு இருபதே நாள், சிம்புவுக்கு இரண்டு வருஷம்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ஒரு படத்தை முடிக்க குறைந்தது ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ எடுத்து கொள்ளும் வழக்கம் உடையவர்...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு பட நாயகி திடீர் மாற்றமா?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'அகிரா' படம் வரும் செப்டம்பர் 2 முதல் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளார் ...

இன்று முதல் ஜோதிகாவுக்கு 20 நாட்கள் டிரெயினிங் ஆரம்பம்!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கடந்த ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி...

தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' நாயகிகள்

பொதுவாக தமிழ் திரையுலகில் நாயகிகளின் காலம் மிகக்குறுகியது என்று கூறுவார்கள். ஒரு ஹீரோ நாற்பது, ஐம்பது வயதிலும் ஹீரோவாகவே நடிப்பார். ஆனால் டீன் ஏஜை தாண்டிய ஒருசில நாயகிகள் வாய்ப்பு இல்லாவிட்டால் அக்கா, அம்மா வேடத்திற்கு தயாராகிவிடுவார்கள் அல்லது திரையுலகை விட்டே காணாமல் போய்விடுவார்கள்...