பன்னீர்செல்வத்தின் பட்ஜெட்டை கலாய்த்த கமல்ஹாசன்
- IndiaGlitz, [Friday,March 16 2018]
துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதிமுகவினர் தவிர மற்ற அனைவரும் பட்ஜெட்டை விமர்சனம் செய்து முடித்துவிட்ட நிலையில் கமல்ஹாசனும் தன் பங்குக்கு தனது டுவிட்டரில் பட்ஜெட்டை கலாய்த்துள்ளார்.
2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து என்று கூறிவிட்டு பட்ஜெட் குறித்து அவர் கூறிய சில விஷயங்களை பார்ப்போம்
*முதலில் தோன்றும் குறளை தவிர இந்த நிதிநிலை அறிக்கை பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே. விவசாயிகள், நெசவாளர் , மீனவருக்கு சிறப்பான திட்டம் ஏதும் இல்லை. எம் தமிழ் மக்களின் வருங்காலத்தை வடிவமைக்க இதைவிட சிறந்த பிரதிநிதிகள் தேவை என்று கமல் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலைத்துறை குறித்து கமல் கூறியதுதான் கலாய்ப்பின் உச்சம், அவர் இதுகுறித்து கூறியபோது, 'என் பகுத்தறிவு ஒருபுறம் இருக்கட்டும். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இந்து சமய அறநிலையத் துறை பற்றி எந்த அறிவிப்பும் இல்லையே... ஏன்? காணாமல் போன ஆயிரம் சிலைகளைப் போல், துறையும் காணாமல் போய்விட்டதோ..? என்று கூறியுள்ளார்.
கடன் குறித்து கமல் கூறியபோது ஒவ்வொரு தமிழரும் தலையில் சுமக்கும் கடன் 45000 ரூபாய். எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவர்க்கு எங்கள் கண்ணீரில் நனைந்த கண்டனம்'
இவ்வாறு கமல்ஹாசன் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
2018-19 தமிழக பட்ஜெட் - எம் விமர்சனத்தை சொல்ல சில சிற்றாய்வுகள் செய்யவேண்டி இருந்தன. ஆதலால் இந்த தாமதம். நிதிநிலை அறிக்கைப் பற்றிய எம் கருத்து pic.twitter.com/RgdlKNfD0D
— Kamal Haasan (@ikamalhaasan) March 16, 2018