'விக்ரம்' படத்தில் உண்மையான வசூலை தெரிவித்த கமல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் தனது 'விக்ரம்’ படத்தின் உண்மையான வசூலை சற்றுமுன் தெரிவித்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்’ திரைப்படம் கடந்த 3ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 40 கோடி ரூபாயும், மூன்று நாளில் 100 கோடி ரூபாயும், ஒரு வாரத்தில் 200 கோடி ரூபாயும், பத்து நாட்களில் 300 கோடி ரூபாயும் வசூலித்ததாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது.
ஆனால் அதே நேரத்தில் இந்த வசூல் கணக்குகள் அதிகாரபூர்வமற்றதா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மனதில் இருந்தது. இந்த நிலையில் இன்று கூட்டம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன் ’தன்னை நடிக்கவிட்டால் 300 கோடி சம்பாதிப்பேன் என்றும் அது உண்மை என்பதை 'விக்ரம்’ படத்தின் வசூல் நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ’நடித்ததால் கிடைத்த பணத்தை வைத்து நான் நன்றாக சாப்பிடுவேன் என்றும் என்னுடைய கடனை அடைப்பேன் என்றும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பேன் என்றும் ஒரு வேளை கொடுக்க பணம் இல்லை என்றால் ’இல்லை’ என்று தைரியமாக என்று கூறுவேன் என்றும் எனக்கு வள்ளல் பட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றும் மனிதனாக இருப்பதே போதுமானது’ என்றும் தெரிவித்துள்ளார்.
அவருடைய பேச்சில் தன்னை நடிக்க விட்டால் 300 கோடி சம்பாதிப்பேன் என்று கூறியதை அடுத்து 'விக்ரம்’ திரைப்படம் 300 கோடி வசூல் செய்து உள்ளதை அவர் உறுதி செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout