டெல்லியில் இருந்து அவசரமாக சென்னை திரும்புகிறார் கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று மாலை சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி காலமானதை அடுத்து தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.

முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் நாளை நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்புவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல்காந்தி சென்னை வருகை: 

திமுக தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை காலமானார். திமுகவின் உதயசூரியனாக இருந்த கருணாநிதியின் மறைவால் அக்கட்சியினர் மிகுந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர்

 என் வாழ்நாளில் ஒரு கருப்பு நாள்: ரஜினிகாந்த் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. திமுக தொண்டர்கள் கதறி அழுது தேற்றுவதற்கு கூட ஆளில்லாமல் உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடல்: நாளைய காட்சிகளும் ரத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை சற்றுமுன் வெளியானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.