இதை உடனடியாக கவனியுங்கள்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வைத்த வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி புதிய அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், வேண்டுகோள்களையும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் விடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் கொரோனா வைரஸால் பெற்றோர்களை இழந்த குழந்தைக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத்திய அரசும் ரூ.10 லட்சம் அறிவித்தது.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை கமல்ஹாசன் அரசுக்கு முன் வைத்துள்ள நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் கிடைப்பதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் அரசு இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.

— Kamal Haasan (@ikamalhaasan) May 31, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com