இதை உடனடியாக கவனியுங்கள்: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் வைத்த வேண்டுகோள்

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தமிழகத்தின் நலன் கருதி புதிய அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், வேண்டுகோள்களையும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் மூலம் விடுத்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் கொரோனா வைரஸால் பெற்றோர்களை இழந்த குழந்தைக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கமல்ஹாசன் வைத்த கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றி கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைக்கு ரூபாய் 5 லட்சம் நிதியுதவி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மத்திய அரசும் ரூ.10 லட்சம் அறிவித்தது.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை கமல்ஹாசன் அரசுக்கு முன் வைத்துள்ள நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனாவால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் கிடைப்பதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும் அரசு இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.

More News

இயக்குனர் விஜய் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரலாகும் புகைப்படங்கள்

அஜித் நடித்த 'கிரீடம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய். அதன்பின்னர் 'மதராசப்பட்டினம்' 'தெய்வத்திருமகள்' 'தலைவா' 'சைவம்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இவர்

கொரோனா நேரத்தில் ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் மோரிஸ் ஜான்சன் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஜெயில் வாழ்க்கையே பெட்டர்… கொரோனா பயத்தால் சிறை கைதிகள் கதறல்!

கொரோனா பரவல் காரணமாக சிறையில் இருக்கும் கைதிகளின் பாதுகாப்பு கருதி அவர்களை இடைக்கால ஜாமீனில் விடுவிக்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தது

கொரோனாவால் இறந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ… தொடரும் சர்ச்சை!

உத்திரப்பிரதேச மாநிலம் ராப்தி ஆற்றங்கரையில் நின்று கொண்டு இரு ஆண்கள் அதுவும் பிபிஇ உடையுடன் இறந்தவர் உடலை

'பிச்சை எடு' என்று கூறிய நெட்டிசனுக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த 'கேப்டன்' மகன்!

'பிச்சையெடுத்து பிழைக்கலாமே' என்று கூறிய நெட்டிசனுக்கு கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நாகரீகமாக பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.