போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி
- IndiaGlitz, [Monday,March 30 2020]
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகள் மற்றும் கவிதைகள், தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆறுதல்கள் ஆகியவற்றை தெரிவித்து வருகிறார்
அதுமட்டுமின்றி மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளுடன் கூடிய விமர்சனத்தையும் அவர் கூறி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து கமல்ஹாசன் இது குறித்து சற்று முன்னர் ஒரு கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்
கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது
போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 30, 2020