மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம்: கமல்ஹாசன் டுவீட்!

  • IndiaGlitz, [Sunday,March 07 2021]

மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம் என கமல்ஹாசன் பதிவு செய்துள்ள ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது ஒவ்வொரு பிரச்சாரத்திற்கும் ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். இருப்பினும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு வலுவான அணிகளை எதிர்த்து அவர் எந்த அளவுக்கு வெற்றி பெறுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கம் மூலம் வாக்காளர்களுக்கு ஒருசில அறிவுரைகளையும் கோரிக்கைகளையும் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கமலஹாசன் சற்று முன்னர் மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம் என்ற தலைப்பில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்: அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது.

மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்.