மத்திய அரசு செய்யாது, ஸ்டாலின் நீங்களாவது செய்யுங்கள்: கமல்ஹாசன் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்காது என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது;

தேர்தல்‌ அறிவிக்கப்பட்ட நாள்‌ முதல்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலையில்‌ எந்த மாற்றமும்‌ இல்லாமல்‌ இருந்தது. கடந்த 66 நாட்களாக உயராமல்‌ இருந்த விலை தேர்தல்‌ முடிந்ததும்‌ தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கொரோனா முதல்‌ அலையில்‌ மூழ்கிய பொருளாதாரம்‌ மீளாத நிலையில்‌ மக்கள்‌ வேலையிழப்பு, வருவாய்‌ இழப்பு, மருத்துவச்‌ செலவினங்கள்‌ என 'அல்லற்பட்டு வருகிறார்கள்‌. இரண்டாவது அலை ஒரு சுனாமியைப்‌ போல தாக்கி தமிழக மக்களின்‌ வாழ்க்கையைத்‌ தலைகீழாகப்‌ புரட்டி போட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில்‌ வெந்த புண்ணில்‌ வேல்‌ பாய்ச்சுவது போல பெட்ரோல்‌, டீசல்‌ விலையும்‌ உயர்ந்து வருவது வேதனையளிக்கிறது. சாமான்ய மக்களின்‌ மீது மேலும்‌ மேலும்‌ சுமை ஏற்றப்படுகிறது. எரிபொருட்களின்‌ விலையேற்றத்தால்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலையும்‌ அதிகரிக்கும்‌ என்பது ஆட்சியாளர்கள்‌ நன்கறிந்ததே.

டாஸ்மாக்‌ மது விற்பனையை வருவாய்‌ வாய்ப்பாகக்‌ கருதுவதைப்‌ போல எரிபொருள்‌ நிரப்பும்‌ நிலையங்களையும்‌ வருமானத்தைப்‌ பெருக்கும்‌ வழிகளாக மத்திய, மாநில அரசுகள்‌ கருதுகின்றனவோ எனும்‌ ௮ச்சம்‌ ஏற்படுகிறது.

மத்திய அரசிற்கு எரிபொருட்களின்‌ விலையைக்‌ குறைக்கும்‌ எண்ணம்‌ இருப்பது போலவே தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலை குறைக்கப்படும்‌ என்று தேர்தல்‌ வாக்குறுதியில்‌ அறிவிக்கப்பட்டிருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும்‌ என்று தமிழக முதல்வர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. பெட்ரோல்‌, டீசல்‌, சமையல்‌ எரிவாயு உருளை ஆஇயவற்றின்‌ விலையைக்‌ குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்‌. மக்களின்‌ சுமையைக்‌ குறைக்க வேண்டும்‌.

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

கொரோனா தடுப்பு நிதி: சூர்யா-கார்த்தி வழங்கிய மிகப்பெரிய தொகை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

'இறைவா' உனக்கு இரக்கமில்லையா? கொரோனா குறித்து சரத்குமாரின் உருக்கமான பதிவு!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது.

நான் நன்றாக பாதுகாப்பாக இருக்கின்றேன்: பெயர்க்குழப்பம் குறித்து நடிகர் மாறன் விளக்கம்!

விஜய் நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாறன் இன்று காலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலமானதாக வெளிவந்த செய்தி திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனாவா குருமாவான்னு அசால்ட்டா இருந்தேன்: சென்றாயன் வைரல் வீடியோ

கொரோனாவா குருமாவான்னு ரொம்ப அசால்ட்டாக இருந்தேன், இப்பொழுது எனக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விட்டது என நடிகர் சென்றாயன் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

சோலோ- கார்ப்பரேட்? புது சர்ச்சையை கிளப்பி இருக்கும் விஜே அர்ச்சனாவின் வீடியோ! நடந்தது என்ன?

கொரோனா பரவல் காரணமாக இளசு முதல் பெருசு வரை தற்போது அனைவரும் செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வருகிறோம்