'விக்ரம்' படத்திற்கு முதல் விமர்சனம் தந்த நடிகர்: கமல்ஹாசனின் ரியாக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் படத்தை பார்த்து முதல் முதலாக விமர்சனம் செய்த பிரபல நடிகருக்கு உலகநாயகன் கமலஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு சில மணி நேரங்களை உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் 'விக்ரம்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பெற்ற நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் 'விக்ரம்’ படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தை பார்க்கும் போது தனக்கு ஆச்சரியமான அனுபவம் ஏற்பட்டது என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
'விக்ரம்’ படத்தை பார்த்து முதன்முதலாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்த நிலையில் இந்த விமர்சனத்துக்கும் கமல்ஹாசன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். உதயநிதி தம்பி அவர்களுக்கு எனது வணக்கம்! 'விக்ரம்’ படத்தை பற்றிய உங்களது கருத்து எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் உங்களை எனது ரசிகர் என அறிவித்துக் கொண்டதற்கு நன்றி! உங்கள் விமர்சனம் மற்ற ரசிகர்களுக்கு தலைசுற்ற வைக்கும் அளவுக்கு உற்சாகப்படுத்தும்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Dear @Udhaystalin thambi. Thanks for your glowing first view report on #Vikram . You had proclaimed yourself as a fan. Your report will enthuse all my other brothers to dizzying heights. @RKFI @turmericmediaTM #VikramHitlist https://t.co/IbeclwXCu8
— Kamal Haasan (@ikamalhaasan) June 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments