close
Choose your channels

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் கமல்ஹாசன்.. செம்ம மாஸ் புகைப்படம்..!

Tuesday, April 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'இந்தியன் 2’ படக்குழுவினர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ள நிலையில் அங்கு கமல்ஹாசன் இருக்கும் செம்ம மாஸ் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் ’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் தைவான் நாட்டில் நடந்த நிலையில் தற்போது படக்குழுவினர் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று உள்ளனர். இங்கு முக்கிய ரயில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் அதில் கமல்ஹாசன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஸ்டண்ட் கலைஞர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா போய் இறங்கியவுடன் கமல்ஹாசன் ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு முக்கிய பகுதியில் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவின் பழமை வாய்ந்த costiera Amalfitana என்ற பகுதியில் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment