சந்தானம் அடுத்த படம்.. கமல்ஹாசன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Wednesday,February 28 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் கமல்ஹாசன் இந்த போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் தயாரிப்பாளர் அன்புசெழியன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

இந்நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’இங்க நான் தான் கிங்கு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனந்த் நாராயணன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே நடிகர் சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘இங்க நான் தான் கிங்கு’ என்ற படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.