சு வெங்கடேசன் எம்பியின் 'மக்கள் ஊழியன்' வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடும் சு வெங்கடேசன் சமீபத்தில் அவரது கட்சியின் பிரச்சார பாடலை வெளியிட்டார் என்பதும் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் வாக்காளர் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை தொகுதி எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் அவர்களின் செயல்பாடுகள், பாராளுமன்றத்தில் அவரது முழக்கங்கள், மதுரை மக்களுக்கு அவர் செய்த நன்மைகள் ஆகியவை குறித்த ‘மக்கள் ஊழியன்’ என்ற வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் மதுரை எம்பி சு வெங்கடேசன் குறித்து கூறியிருப்பதாவது:
இன, மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் சு வெங்கடேசன் ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
இன, மத பேதமின்றி நாற்பதாண்டுகளாய் நற்பணிகள் செய்து வருகிறோம். மக்களை நேசிப்பவர்களிடம் அரசியல் அதிகாரமும் கிடைத்தால் இன்னும் அழுத்தமாய் நற்காரியங்களைச் செய்யலாம் என்பதை தோழர் @SuVe4Madurai ஆற்றிய களப்பணிகள் காட்டுகின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2024
மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக தோழர் சு. வெங்கடேசன்… pic.twitter.com/bjHM9B6mKf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com