மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:
பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள், பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் தான். 1950ல் இந்தியா குடியரசு ஆனபோது அதே சத்தியத்தை இந்திய அரசு மக்களுக்கு கொடுத்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிடக்கூடாது.
ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், ஒரு சிறிய வெற்றி. ஆனால் எங்கள் மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால் அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையற்றது.
பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளை தவிர. இருப்பினும் நாங்கள் அதை சந்தோஷமாக பாடிக்கொண்டிருக்கின்றோம், பாடிக்கொண்டிருப்போம். ஏனெனில் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்திற்க்கும் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. கூடி உண்போம். அதை திணிக்க முயற்சித்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை திணிக்காதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2019
புதிய திட்டங்களோ
சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக. pic.twitter.com/xH6c0ANvQh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com