மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது:

பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால் விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள், பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் தான். 1950ல் இந்தியா குடியரசு ஆனபோது அதே சத்தியத்தை இந்திய அரசு மக்களுக்கு கொடுத்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிடக்கூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், ஒரு சிறிய வெற்றி. ஆனால் எங்கள் மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால் அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தேவையற்றது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை. வங்காளிகளை தவிர. இருப்பினும் நாங்கள் அதை சந்தோஷமாக பாடிக்கொண்டிருக்கின்றோம், பாடிக்கொண்டிருப்போம். ஏனெனில் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாசாரத்திற்க்கும் மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. கூடி உண்போம். அதை திணிக்க முயற்சித்தால் குமட்டிவிடும். தயவுசெய்து அதை திணிக்காதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More News

சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி

சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.

தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்து: மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஜாதி பாகுபாடு குறித்து பேசிய நிலையில் அடுத்து அவர் இயக்கவுள்ள தனுஷ் படத்திலும் ஒரு சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கவின் - லாஸ்லியா காதலை விட சுபஸ்ரீ மரணம் முக்கியம்: தமிழ் நடிகர் ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பேனரால் இழக்கப்பட்டுள்ளது

இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்: வலியுறுத்தும் தமிழ் நடிகை

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'ஒரே நாடு ஒரே மொழி' என இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஒரு கருத்தை கூறினார்.

வனிதாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இதில் இன்னும் இருவர் வெளியேற்றப்பட்டவுடன் ஐவர் இறுதி போட்டிக்கு செல்வர்