கொரோனா வைரஸ்: கமல்ஹாசன் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகளும், அரசியல் பிரபலங்களும், திரையுலகினரும் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் உலக நாயகன் நடிகர் கமலஹாசன் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

விலகி இருத்தல் அவசியம். வீட்டில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களுடன் போனில் தினமும் பேசுங்கள். ஆனால் வாங்க எல்லோரும் மீட் பண்ணலாம் என யாராவது கூப்பிட்டால் தயவுசெய்து செல்ல வேண்டாம். அவர்களால் நமக்கும், நம்மால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பொறுப்பாக இருக்க வேண்டும்.

வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்னாடியே செய்ய வேண்டும். விலகி இருங்கள் பாதுகாப்போடு இருங்கள். நமக்கு ஒன்றும் வராது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை, மற்றும் அசட்டு தைரியத்தாலும் இந்த நோய் பரவ நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. முன்னெச்சரிக்கை தான் முக்கியமான விஷயம். மறந்துவிடாதீர்கள். இவ்வாறு நடிகர் கமலஹாசன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

நீட் தேர்வு; தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு சிறப்பு சலுகை!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 சட்டப்பிரிவின் கீழ் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கான சில சலுகைகளை அறிவித்து இருக்கிறார்.

பொருட்களின்மீது தங்கும் கொரோனா பல மணி நேரம் வாழும் தன்மையுடையதா???

பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது ஒரு நாளைக்கும் மேலாக கொரோனா வைரஸால் உயிர்வாழ முடியும்.

விடுமுறைக்காக கொரோனா வதந்தி பரப்பிய இருவர் கைது: சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் கொரோனாவுக்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கள்: மீண்டும் அண்ணாச்சி கடைக்கு மாறும் பொதுமக்கள்! 

ஒரு காலத்தில் மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் கை கொடுத்தது அண்ணாச்சி கடைதான். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் வந்தபின்னரும்,

நாளை டாஸ்மாக் மூடப்படும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்த வேண்டுமென சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.