கமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்!

  • IndiaGlitz, [Wednesday,January 29 2020]

இசைஞானி இளையராஜா அவர்கள் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும் வெகு அரிதாகவே மற்ற இசையமைப்பாளர்களின் படங்களில் பாடி வருகிறார். அந்த வகையில் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்த ஒரு படத்தில் இடம் பெற்ற பாடலை இளையராஜா பாடியுள்ளார். இந்த பாடலை உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

கிரவுன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’சிதம்பரம் ரயில்வே கேட்’ என்ற படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘சொக்குறேன் சொக்குறேன்’ என்ற பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளார்.

இந்த பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த பாடலை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டார். இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் இப்ராஹிம், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, இயக்குனர் சிவபாலன், பாடலாசிரியர் அருண்பாரதி உள்பட படக்குழுவினர் கொண்டனர். இந்த பாடல் இளையராஜாவின் மற்ற பாடல்களைப் போல் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

ஃபேஸ்புக் இளைஞருடன் போனில் பேசிய மனைவி: கணவர் செய்த விபரீத செயல்

பேஸ்புக்கில் நட்பான இளைஞர் ஒருவரிடம் தனது மனைவி மணிக்கணக்காக மொபைல் போனில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர் கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

18 ஆண்டுகள் கழித்து வெளியாகும் மணிரத்னம் இயக்காத திரைப்படம்!

மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான 'வானம் கொட்டட்டும்' என்ற திரைப்படத்தின்  ரிலீஸ் தேதி பிப்ரவரி 7 என ஏற்கனவே

சென்னையில் 68 பேருக்கு கரோணா வைரஸ் பாதிப்பு அறிகுறி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..! தமிழக சுகாதார செயலாளர்.

கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதைத் தடுக்க தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவணப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று மாலையுடன் முடிவடைந்து நேற்றிரவே அவர் சென்னை திரும்பினார்.

டெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..!

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்ற சாய்னா, அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அருன் சிங் முன்னிலையில், தனது சகோதரி சந்த்ரான்ஸ்ஷுவுடன் பாஜகவில் இணைந்துள்ளார்.