டிஸ்சார்ஜ் ஆன கையோடு டீசரை வெளியிட்ட கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஞாயிறன்று முடித்ததோடு தனது காலில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆனார் என்றும் அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஒரு சில மணி நேரங்களில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மலையாள திரைப்படம் ஒன்றின் டீசரை வெளியிட்டு உள்ளார். ’ஆர்க்கரியம்’ (Aarkkariyam ) என்ற மலையாள படத்தின் டீசரை வெளியிட்ட அவர் இதுகுறித்து கூறியதாவது:
பல திறமையான நட்சத்திரங்கள் நடித்துள்ள ’ஆர்க்கரியம்’ என்ற படத்தின் டீசரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள், இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பிஜூமேனன், பார்வதி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சானு ஜான் வர்கீஸ் என்பவர் இயக்கியுள்ளார்.
Delighted to launch the official teaser of ‘Aarkkariyam’, a movie that features stellar talents on and off screen. Wishing the team all the best and really looking forward to watching this!
— Kamal Haasan (@ikamalhaasan) January 22, 2021
YouTube link: https://t.co/7l2BKmY7jA#Aarkkariyam #AarkkariyamMovie pic.twitter.com/wUUltzLkUF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments