பிப்ரவரி 15ல் கமல்ஹாசனின் முக்கிய அரசியல் நிகழ்வு

  • IndiaGlitz, [Tuesday,February 13 2018]

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விபரங்களை அதிகாரபூர்வமாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த மண்ணில் அறிவிக்கவுள்ளார். இதனையடுத்து அவர் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் தனது கட்சிப்பெயரை வரும் 15 ஆம் தேதி பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே வரும் 15ஆம் தேதி கமல்ஹாசனின் கட்சியின் பெயர் என்ன என்பது தெரிந்துவிடும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை  தொடங்கி வைத்துள்ள நிலையில் தற்போது கட்சியின் பெயரையும் பதிவு செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.