இந்த நாளில் இந்தியர் என இணைவோம்: கமல்ஹாசன் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் இன்று ஈகைத் திருநாளான ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இன்று ரம்ஜான் கொண்டாடி வரும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட அனைத்து பிரமுகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரை உலக பிரமுகர்கள் பலரும் தங்களது சமூக வலைதளம் மூலம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு தனது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
கமல்ஹாசனின் இந்த ரம்ஜான் வாழ்த்து டுவிட்டுக்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் மேலும் இஸ்லாமியர் வேடங்களில் கமல்ஹாசன் நடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ட்விட்டின் கமெண்ட்டுகளில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 25, 2020
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com