இந்த நாளில் இந்தியர் என இணைவோம்: கமல்ஹாசன் டுவீட்

  • IndiaGlitz, [Monday,May 25 2020]

உலகம் முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் இன்று ஈகைத் திருநாளான ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இன்று ரம்ஜான் கொண்டாடி வரும் இஸ்லாமியர்களுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்பட அனைத்து பிரமுகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரை உலக பிரமுகர்கள் பலரும் தங்களது சமூக வலைதளம் மூலம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு தனது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

கமல்ஹாசனின் இந்த ரம்ஜான் வாழ்த்து டுவிட்டுக்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் மேலும் இஸ்லாமியர் வேடங்களில் கமல்ஹாசன் நடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ட்விட்டின் கமெண்ட்டுகளில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் இல்லை: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணின் சம்மதத்துடன் உடலுறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என ஒரிசா மாநில ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம்பட்டி ராஜாவுக்கு சீமராஜா சிவகார்த்திகேயன் இரங்கல்

சுதந்திர இந்தியாவில் பட்டம் கட்டிய கடைசி மன்னர் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவன்

10 ஆயிரம் ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவியை கொலை செய்த கணவனால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

நடிகை அஞ்சலியின் வொர்க்-அவுட் பார்ட்னர்: வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தற்போது கோலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விடுமுறையில் இருக்கும்