கமல் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்.. பேயறைந்தவாறு இருக்கும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா..!

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில் பிரதீப் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உத்தமர்களா என்ற கேள்வியை எழுப்பிய கமல்ஹாசன் கண்டிப்பாக அவர்களையும் தண்டிப்பேன் என்று கூறியிருந்தார்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் அவர் அடுக்கடுக்காக சில கேள்வியை கேட்ட நிலையில் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ரவீனா உள்ளிட்டோர் பேயறைந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள். அதே சமயம் இந்த பக்கம் விசித்ரா, அர்ச்சனா ஆகியோர் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இன்றைய புரமோவில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது

நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானே, உண்மை என்றால் இது என்ன? அந்த படத்தை போட்டு காமிங்க சார்.. ஒரு குறும்படம்.. அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது நீங்க என்ன பண்ணுனீங்க? மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன், அதற்கு ஒரு குறும்படம். சிவப்பு மஞ்சளா தெரிஞ்சிருக்குனா என்ன மாலைக்கண்ணா.. கொடுக்க மாட்டேன்னு சொல்லி இருக்கலாமே, அது உங்கள் உரிமை தானே, நீங்கள் என்னையும் உங்க கூட பிளேயரா உங்க கூட சேர்த்துக்கிட்ட மாதிரி தெரியுது’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

கமல்ஹாசனின் கேள்விகளுக்கு மாயா, பூர்ணிமா குரூப் என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்பதை இன்றைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

More News

கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேய்.. 'ஜிகிர்தண்டா 2' படம் குறித்து பார்த்திபன்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா 2' படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த நடிகரும்

அனல் பறக்கும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி.. இதுதான் காரணம்..!

பிக் பாஸ் வீடு ஒரு பக்கம் பிரதீப் வெளியேற்றத்தினாலும், இன்னொரு பக்கம் மாயா பூர்ணிமா குரூப்பின் அட்டகாசத்தாலும் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி செல்ல இருப்பதாக

கேம் ஓவர்.. ரஜினியின் மாஸ் வசனத்துடன் பிரதீப் பதிவு.. செம்ம பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதீப் விவகாரம் தான் கடந்த ஒரு வாரமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டை

இந்த வாரம் 2 எலிமினேஷனா? இரண்டும் மாயா குரூப்பா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக பிரதீப் வெளியேற்றப்பட்டு ஒரு வாரம் ஆகியும் இன்னும் பிரதீப்பை பற்றி போட்டியாளர்கள்

'தீர விசாரிப்பதே மெய்': பிரதீப் பதிவுக்கு கமல்ஹாசனின் பதில்.. புரமோ வீடியோ வைரல்..!

தீர விசாரிப்பதனாலே வந்த தீர்வு, இது தீர்ப்பு அல்ல.. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி. குற்றச்சாட்டியவர்கள் யோக்கியமா?