வேற எவன் வந்தாலும் சரி! யாரை கூறுகிறார் கமல்?

  • IndiaGlitz, [Friday,March 09 2018]

நேற்று சென்னையில் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் மகளிர் தின நிகழ்ச்சியில் தொண்டர்களின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அதில் ஒரு கேள்வி, நீங்கள் ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால், உங்கள் ஆட்சி திருப்தி அளிக்கவில்லை என்று மக்கள் கூறினால் பதவி விலகுவீர்களா? என்ற கேள்வி

இந்த கேள்விக்கு பதில் கூறிய கமல்ஹாசன், 'இந்த கேள்வி இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் முன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த பயமே வராமல் போய்விட்டதால்தான் வேலை சரியாக நடக்கவில்லை. இந்த சந்தேகத்தை பட்டுக்கொண்டே இருங்கள், ஒரு காலத்திலும் அயர்ந்துவிடாதீர்கள்.

இந்த ஆளு நேர்மையா இருக்கின்றானா? என்று என்னை பார்த்து கொண்டே இருங்கள். நீங்கள் பார்த்து கொண்டே இருந்தால் எனக்கு நேர்மையாக இருப்பதை தவிர வேறு வழியில்லை. எனக்கு மட்டுமல்ல, வேற எவன் வந்தாலும் சரி' என்று கமல்ஹாசன் கூறினார். எவன் என்று கமல் குறிப்பிடுவது யாரை? என்பது குறித்து சமூகவலைத்தளத்தில் ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கின்றது. கமல்ஹாசன் குறிப்பிட்ட அந்த நபர் யாராக இருக்கும் என்பதை யூகித்து கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்