மக்களை எதிர்கொள்ள அஞ்சுகிறார்களா? தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!
- IndiaGlitz, [Saturday,January 23 2021]
தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் அதிமுக, திமுக மட்டுமின்றி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கமலஹாசன் ஏற்கனவே சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டார் என்பதும் தற்போது அவர் சர்ஜரி செய்து ஓய்வு எடுத்துக் வருகிறார் என்பதும் விரைவில் அவர் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் அவரது பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசுக்கும் மற்ற அரசியல் கட்சிக்கும் அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பதும் அந்த கேள்விகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தற்போது கிராமசபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி ஒன்றை கமல்ஹாசன் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும் #நான்_கேட்பேன்
நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும் #நான்_கேட்பேன் (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2021