ரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Monday,November 30 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி குறித்த தெளிவான ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ’விரைவில் அரசியல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் விரைவில் அரசியல் குறித்த முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், நாளை உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றும் வருகை தரும் பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது
நாளைய செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், நாளை கமலஹாசனும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாளை ?? ?????? ???????? காலை 11 மணியளவில் @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.@maiamofficial party President @ikamalhaasan will be addressing the media at the party head office at 11 AM tomorrow. pic.twitter.com/Ka9NRYVdY7
— Sugashini Kandasamy (suகா) (@sugashinik) November 30, 2020