இனி விதைப்பது நற்பயிராகட்டும்: கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,January 13 2018]

உலக தமிழர்கள் அனைவரும் நாளை பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விரைவில் அரசியலில் குதிக்கவிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு' என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் வாழ்த்து கூறிய கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் பதில் வாழ்த்த்துக்களை தெரிவித்து வருவதோடு இந்த ஆண்டு உங்களுடைய படத்தையும் அரசியல் வருகையையும் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறி வருகின்றனர். விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' ஆகிய இரண்டு படங்களும், கமல்ஹாசனின் கட்சி பெயர் அறிவிப்பும் இந்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழ் ராக்கர்ஸ் அட்மினுக்கு விக்னேஷ்சிவன் வேண்டுகோள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் நேற்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் நல்ல ரிசல்ட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோடுகிறது.

முடிவுக்கு வந்தது அஞ்சலியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

அஞ்சலி நடித்த் 'பலூன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வந்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வைரமுத்து கருத்தை வைத்து மதக்கலவரமா? மன்சூர் அலிகான் ஆவேசம்

சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறிய ஒரு கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பாரதிராஜா உள்பட ஒருசிலரும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தல அஜித்தின் தெறிக்கும் டீசர் ரிலீஸ் தேதி தெரிய வேண்டுமா?

தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

இளைஞர் கூட்டத்தில் இணைந்ததால் நானும் இளைஞன் ஆகிறேன்: செந்தில்

இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இன்றைய முன்னணி நடிகர்களோடு முந்தைய ஜெனரேஷன் நடிகர்களான கார்த்திக், சுரேஷ்மேனன், செந்தில் ஆகிய நடிகர்களும் நடித்துள்ளதால்