திடீர் திருப்பம்: கைமாறுகிறதா டார்ச்லைட் சின்னம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் டார்ச்லைட் சின்னம் கேட்டிருந்த நிலையில் டார்ச்லைட் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சி என்ற கட்சிக்கு சமீபத்தில் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சி அதிருப்தி அடைந்தது
இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒதுக்கிய டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளிவ்ந்துள்ளது.
தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த டார்ச்லைட் சின்னம் வேண்டாம் என எம்ஜிஆர் மக்கள் கட்சி விண்ணப்பம் செய்துள்ளதால் அந்த சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சி கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே டார்ச்லைட் சின்னத்தை கமல்ஹாசன் கட்சியினர் மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டதால், அதே சின்னம் வரும் சட்டமன்ற தேர்தலிலும் கிடைத்தால் பாசிட்டிவாக இருக்கும் என்று கருதினர். அந்த வகையில் தற்போது மீண்டும் டார்ச்லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக வெளியாகும் தகவலால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments