திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இல்லையா? தேசிய கட்சியுடன் கூட்டணி என தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அக்கட்சி தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி என மூன்று கூட்டணி தேர்தலில் போட்டியிடும் என்றும் இது தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கிவிட்ட நிலையில் இந்த கூட்டணியில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்றும் அவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க இருப்பதாகவும், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கமல் கட்சிக்கு கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கமல் கட்சிக்கு ஏற்கனவே தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ள நிலையில் கமல்ஹாசன் கட்சி வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout