கொரோனாவால் மறைந்த தொண்டருக்கு கமல்ஹாசனின் வீரவணக்கம் கவிதை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவால் பலியான தனது கட்சியின் தொண்டருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் அவர்கள் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம். கொரோனாவால் மறைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர் திலக் அவர்களின் இறுதிச்சடங்கின்போது வீரவணக்கம் ஒலித்த குரலின் வீடியோவை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், ‘வீரவணக்கம்’ கவிதை ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:
வீரவணக்கம்!
வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!
கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்
காலை என்றொரு பொழுதில்லாமல்
காலம்
உலகில்
கழிந்தது இல்லை...
நாளை என்ற
கனவில்லாமல்
இரவுகள்
என்றும்
கடந்தது இல்லை...
வேலை என்று ஏற்பது அல்ல,
வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்..
தோலை உரித்து ஆராய்ந்திடினும்
வண்ணம் என்பது
ஒளி மாயை தான்.
உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள்
அனைவருக்குமே பொருந்தும், எனவே
கொள்ளைநோய்
நமைக் கொல்லும்போதும்
மானுடம் மீண்டிடும்
மந்திரம் சொல்வோம்.
நானெனும்
அகந்தை மறந்த
மனிதர்
நிதமும் பேசும்
உண்மைச் சொல்
அது.
மாயமும் இல்லை! மந்திரமில்லை!!
நம்மை மிஞ்சும்
ஈகையும் அன்பும்!!!
தாயிடம் கற்றது
போதாதென்றால்
வாழ்விடம் கற்பீர்,
வேறேது வழி?
வீரவணக்கம் என்றிடும் கோஷம்,
வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று....
நாளை
என்றொரு
நாளை நோக்கி
நடக்கும்
நம்மவர் அனைவருக்குமே....
நாளை நமதே
கமல்ஹாசனின் இந்த ‘வீரவணக்கம்’ கவிதை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
வீரவணக்கம்!
— Kamal Haasan (@ikamalhaasan) June 13, 2020
வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!
கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்!! pic.twitter.com/a03mN8P9Ux
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments