அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே: கமல்ஹாசனின் 'நம்பிக்கை' பாடல் வரிகள்
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
கொரோனா தொற்றினால் அச்சம் அடைந்திருக்கும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கமல்ஹாசன் ஒரு பாடல் எழுதியிருப்பதாகவும், 'அறிவும் அன்பும்' என்று தொடங்கும் அந்த பாடலை அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவிஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், முகென் என பல பிரபலங்கள் இணைந்து பாடியுள்ளனர் என்றும் இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த பாடல் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இந்த பாடலின் வரிகளை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பாடலின் வரிகள் இதோ:
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே
தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே
அலாதி அன்பிருந்தால்
அனாதை யாருமில்லை
அடாத துயர் வரினும்
விடாது வென்றிடுவோம்
அகண்ட பாழ் வெளியில்
ஓர் அணுவாம் நம்முலகு -அதில்
நீரே பெருமளவு.
நாம் அதிலும் சிறிதளவே
சரி சமம் என்றிடும் முன்பு
உளைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
சரி சமம் என்றிடும் முன்பு
உனை சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
உலகிலும் பெரியது
உம் அகம் வாழ் அன்பு தான்
உலகிலும் பெரியது
நம் அகம் வாழ் அன்பு தான்.
புதுக் கண்டம் புது நாடு என வென்றார் பல மன்னர் அவர்
எந்நாளும் எய்தாததை சிலர்
பண்பால் உள்ளன்பால்
உடன் வாழ்ந்து உயிர் நீத்து அதன் பின்னாலும்
சாகாத உணர்வாகி உயிராகிறார்
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே
அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே
சரி சமம் என்றிடும் முன்பு
உனைச் சமம் செய்திடப் பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவெனப் புரிந்திடப் பாரு
அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே...
"அறிவும், அன்பும்"
— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2020
@RKFI @GhibranOfficial @anirudhofficial @Bombay_Jayashri @thisisysr #Siddharth @sidsriram @Shankar_Live @shrutihaasan @ThisIsDSP @themugenrao @andrea_jeremiah @lydian_official @thinkmusicindia #MaheshNarayanan #ArivumAnbum pic.twitter.com/hhTDU8QD0m