தள்ளி போகும் 'தக்ஃலைப்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு.. இடையில் என்ன செய்ய போகிறார் கமல்?

  • IndiaGlitz, [Thursday,February 08 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் நடைபெறும் என்று தெரிகிறது.

சென்னையில் மார்ச் மாதம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், ஜெயம் ரவி காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் செர்பியா நாட்டிற்கு செல்ல இருப்பதாகவும் அங்கு தான் பிரமாண்டமாக கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்ச் மாதம் வரை கமல்ஹாசன் ’கல்கி 2898ஏடி’ படத்தில், அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி தேர்தல் பணிகள் வேறு இருப்பதால் அந்த பணிகளையும் அவர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசனின் 234 படமாக ‘தக்ஃலைப்’ உருவாகி வரும் நிலையில், 235 வது படமாக ’கல்கி 2898ஏடி’, 236வது படமாக ’இந்தியன் 3’, 237 வது படமாக அன்பறிவ் படம் ஆகியவை உருவாக உள்ளது என்பதும் அடுத்தடுத்து கமல் ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் அளவிற்கு அவருடைய படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

சென்னையில் இயக்குநர்  வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை.. நக்சல்களுடன் தொடர்பா?

சென்னையில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரின் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை என்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'லெஜண்ட் சரவணன்' படத்தை இயக்குவது தனுஷ் பட இயக்குனரா? அவரே கூறிய விளக்கம்..!

பிரபல தொழிலதிபர் 'லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட் 'என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சைதை துரைசாமி மகன் நிச்சயம் திரும்பி வருவார்.. தமிழ் திரைப்பட ஹீரோ நம்பிக்கை..!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் காணாமல் போன நிலையில் அவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்

'லால் சலாம்' படத்தின் சிங்கிள் பாடல்.. தேனிசை தென்றலின் உருக வைக்கும் குரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை விவாகரத்தா? 12 ஆண்டு மணவாழ்க்கை முடிகிறது..!

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது