பிக்பாஸ் 2ஐ அடுத்து கமல்ஹாசனின் திட்டம்

  • IndiaGlitz, [Monday,June 18 2018]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 100 நாட்கள் நடைபெறவுள்ளதால் இதனையடுத்து கமல்ஹாசன் தன்னுடைய 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கியுள 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கிவிடும்

இதன்பின்னர் 'சபாஷ் நாயுடு' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கவுள்ளார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது. அதன்பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் ஒரு விபத்தில் சிக்கியதால் இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகவுள்ளது

More News

அருள்நிதியின் அடுத்த பட இயக்குனர் அறிவிப்பு

நல்ல கதைகளை தேர்வு செய்து வெற்றிப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி.

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் முதல் தேசிய விருது பெற்ற கலைஞர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் 2: காக்ரோச் கதை சொல்லி பல்பு வாங்கிய யாஷிகா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்கள் அனைவரும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் ஓவியாவின் பகுதிகளை அடிக்கடி பார்த்து மனப்பாடம் செய்து வந்திருப்பார்கள்

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பார்வையாளர்கள் கருத்து என்ன?

கடந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும்போது பார்வையாளர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. ஏனெனில் பிக்பாஸ் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிய நிகழ்ச்சி.

பிக்பாஸ் 1 மற்றும் 2 போட்டியாளர்களை ஒப்பிட்ட காமெடி நடிகர்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இந்த பிக்பாஸ் 2 பெரிய வித்தியாசத்தை தரவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது.