முதல்வர் ஈபிஎஸ் கூட்டும் முக்கிய கூட்டத்தில் கமல்ஹாசன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து இன்று மாலை 5.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை செய்தியாளர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று (08.07.2019) மாலை 5.30 மணியளவில் தமிழக அரசு சார்பாக நடக்கவிருக்கும் 'பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. @ikamalhaasan அவர்கள் இன்று (08.07.2019) மாலை 5.30 மணியளவில் தமிழக அரசு சார்பாக நடக்கவிருக்கும் 'பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில்' கலந்து கொள்ளவிருக்கிறார்
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) July 8, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments