கமல் தலைமையில் நடந்த சினேகன்-கன்னிகா திருமணம்: வைரல் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடலாசிரியர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சினேகன் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்யப்போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 29-ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக சினேகன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் சினேகா -கன்னிகா ரவி திருமணத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நடத்திவைத்தார். இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நடிகை கன்னிகா ரவி, சமுத்திரக்கனி நடித்த ’அடுத்த சாட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக சினேகன் மற்றும் கன்னிகா ரவி காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் தற்போது இந்த திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மவர் மக்கள் பெருந்தலைவர் உலகநாயகன் பத்மஸ்ரீ @ikamalhaasan அவர்களின் தலைமையில் கவிஞர் @KavingarSnekan @KannikaRavi திருமணம் இனிதே சிறப்புற நடைபெற்றது ?? @maiamofficial pic.twitter.com/vGElGNNfKa
— ?????????????????? ???????????????? (@Ramhaasan7) July 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com