மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி: கமல்ஹாசன் பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

என்னுடைய பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி என கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.

மத்திய அரசு விரைவில் சினிமா சீர்திருத்த சட்டம் அமல்படுத்த உள்ளது. இதற்காக மத்திய அரசு சினிமா பிரபலங்கள் உள்பட பலரையும் அழைத்து கருத்துக் கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த கூட்டமொன்று டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற போது இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கமல்ஹாசன் உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் ’என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும் இந்த கூட்டத்திற்கு கருத்து தெரிவிக்க எனக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி என்று கூறினார்.

மேலும் டெல்லியில் நடந்த சினிமா சீர்திருத்த சட்டம் குறித்த மனு பற்றி வெளியே செல்ல அனுமதி இல்லை என்று அவர் கூறினார். மேலும் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிக் கொண்டு வருகிறது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.