ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனங்களே இல்லையா? கமல்ஹாசன் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதித்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தவிர ஆக்சிஜன் தயாரிப்பதற்கு வேறு நிறுவனங்களே தமிழகத்தில் இல்லையா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தால் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம் என வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தமிழக அரசு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதிப்பது என உறுதி செய்தது. இதுகுறித்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் ஆக்சிஜன் தவிர வேறு எந்த செயல்பாடும் ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை தவிர வேறு நிறுவனமே தமிழகத்தில் இல்லையா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பெருந்தொற்று காலத்தில் போராட்டத்திற்கான விதையை தூவி விடும் இந்த முடிவை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments