வேலையை ஆரம்பிக்கலாமா? 'பிக்பாஸ் 4' நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசனின் அதிரடி அறிவிப்பு

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சிலர் பெரிய திரையிலும் நல்ல வாய்ப்புகளை பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் விரைவில் பிக்பாஸ் 4வது சீசன் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்றாடம் நாம் யதார்த்தமாக ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. உலகெங்கும் பரவியிருக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய், இந்த உலகம் ஒரு சின்ன கிராமம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறது. எங்கேயோ அமேசானில் தீப்பிடித்தால் இங்கே நமக்கு ஆக்சிஜன் குறைகிறது.

நீங்களும் நானும் வேலைக்குப் போகவில்லை என்றால் நம்மை நம்பி இருப்பவர்கள் நிலைமை என்னவாகும். ஒரு சங்கிலித் தொடராக நம்மை நம்பி இருப்பவர்கள் 5 மாத காலங்களாக வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். நோய் காரணத்தினால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதற்காக வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க முடியாது. உலக சுகாதார அமைப்பு நமக்கு அறிவுறுத்தியபடி நாம் பாதுகாப்பாக இருப்போம். இதோ நான் வந்துட்டேன். அதே போல் நீங்களும் உங்கள் வேலையை தொடங்குங்கள். நம்மை நம்பி இருப்பவர்களை வாழ வையுங்கள். நாமே முன்னெடுப்போம். ஒரு புதிய தொடக்கத்தை புதிய வாழ்க்கையை தொடங்குவோம். நாமே தீர்வு என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து ’வேலையை ஆரம்பிக்கலாமா’ என்று கேள்வி எழுப்பியதோடு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க போவதை அவர் உறுதி செய்தார். இருப்பினும் நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்து அவர் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இது நிச்சயம் சுயநலமல்ல, எல்லோரும் கடைபிடியுங்கள்: நடிகர் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று திரையுலகில் வாய்ப்புகளை பெற்ற நடிகர்களில் ஒருவர் மகத். இவர் தற்போது 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' 'நான்தான் உத்தமன்'

ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி: தேசிய விருது பெற்ற நடிகைக்கு நன்றி கூறிய சூரி!

பிரபல காமெடி நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 

எட்டே வாரத்தில் பேசிய குழந்தை: ஆனந்தக்கண்ணீர் விட்ட பெற்றோர்

பொதுவாக குழந்தைகள் 10 முதல் 14 மாதங்கள் கழித்தே முதல் வார்த்தையை பேசும் என்ற நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த குழந்தை ஒன்று பிறந்து இரண்டே மாதத்தில் 'ஹலோ' என்ற வார்த்தையை பேசியுள்ளது

டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒருவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை!!!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரரான டுவெய்ன் பிராவோ டி20 போட்டிகளில் முதல் முறையாக 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்

நம்ம கேப்டன் விராட் கோலி வீட்டில் விஷேசம்… டிவிட்டரில் தகவல்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது டிவிட்டர் பதிவில் “நாங்கள் இனிமேல் 3 பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது” என மகிழ்ச்சி செய்தியை தெரிவித்து இருக்கிறார்.