கமல்ஹாசனுக்கு திடீர் தடை: திட்டத்தில் மாற்றமா?

  • IndiaGlitz, [Wednesday,February 21 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இன்று அவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்

இந்த நிலையில் கமல்ஹாசனின் இரண்டாவது நிகழ்ச்சியாக இன்று காலை அப்துல்கலாம் படித்த பள்ளிக்கு சென்று உரைநிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசியல் இயக்கத்தினர் மாணவர் மத்தியில் கலந்துரையாடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் கமல்ஹாசனுக்கு இந்த பள்ளிக்கு செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதால், இந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார்.

இருப்பினும் கமல்ஹாசனின் மற்ற நிகழ்வுகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் வேறு எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனின் நேர்மையான அரசியல் பயணம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக அப்துல்கலாம் அவர்களின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

More News

விடிவி 2: 17 வருடங்களுக்கு பின் கவுதம் மேனனுடன் இணையும் நாயகன்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய மிக அருமையான காதல் படங்களில் ஒன்று 'விண்ணை தாண்டி வருவாயா'. இந்த படத்தில் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸியாக சிம்பு, த்ரிஷா வாழ்ந்திருப்பார்கள்.

சென்னைக்கு குட்பை சொன்ன 'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர்

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஆசி பெற்ற இளம் நகைச்சுவை நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் பிசியாக இருந்தாலும், அவரை தேடி வரும் திரையுலக பிரபலங்களை சந்திக்க அவர் மறுப்பு தெரிவித்ததே இல்லை

ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: இளம்பெண் பலியான பரிதாபம்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், இதன்மூலம் ஏற்படும் ஒருசில தீமைகளால், சிலசமயம் உயிர்ப்பலியும் ஏற்படும் கொடுமை நடந்து வருகிறது.

கட்சி ஆரம்பிக்கும் முன்பே ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த கமல்

நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு, முதல் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதுரை சென்றார்.