மக்களவை தேர்தலில் போட்டியில்லை.. ஆனாலும் எம்பியாகிறார் கமல்ஹாசன்.. எப்படி?

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்து ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இது குறித்து பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் போட்டியில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் முழு ஆதரவளிக்கும் என்றும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது திமுக கூட்டணியில் இருந்து ஒரு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறி இருப்பதாவது: திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களும் கலந்து பேசியதில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வது எனவும் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத கமல்ஹாசன் அடுத்த ஆண்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் எம்பி ஆகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகர் சங்க கட்டிடம்.. அமைச்சர் உதயநிதியை அடுத்து கமல்ஹாசன் செய்த உதவி..!

 நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சி கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் நிலையில்  நிதி நெருக்கடி காரணமாக இந்த கட்டிடத்தின் பணிகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

பாலைவன புயல்.. உயிரை காக்க போராடும் ஹீரோ..  அசர வைக்கும் 'ஆடு ஜீவிதம்' டிரைலர்.!

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த  'ஆடு ஜீவிதம்' என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்

பிக்பாஸ் பிரதீப் நடித்த 2 படங்களின் இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு பாதியில் வெளியேற்றப்பட்ட பிரதீப் அந்தோணியை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் தற்போது மூன்றாவது படத்திற்கு

ஈஷா யோகா மையத்தில் கணவருடன் அமலாபால்.. மொத்தமா மாறிட்டாரே.. வைரல் வீடியோ..!

நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடிகை அமலா பால் தனது கணவருடன் ஈஷா யோகா மையத்தில் சிவபெருமானை மனமுருகி வழிபட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்

மலையாள பொறுக்கிகள்: 'மஞ்சும்மெல் பாய்ஸ்' படத்தை கடுமையாக விமர்சனம் செய்த திரையுலக பிரபலம்..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற படத்தை தமிழக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் தமிழ் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் இந்த படத்திற்கு தங்களது