தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்?

  • IndiaGlitz, [Monday,October 12 2015]

கடந்த 1989ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜெயராம், திலகன், ஊர்மிளா மற்றும் பலர் நடித்த மலையாள த்ரில் திரைப்படம் 'சாணக்யன். இந்த படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார், 26 வருடங்கள் கழித்து மீண்டும் கமல்ஹாசன் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படம் ஒரு முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது. மெளலி திரைக்கதையில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகவுள்ள காமெடி திரைப்படத்திற்கு முன்னரே டி.கே.ராஜீவ்குமார், இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

'சாணக்யன்' படத்தில் இயக்குனராக அறிமுகமான டி.கே.ராஜீவ்குமார் இந்தியாவின் முதல் 3D திரைப்படம் என்ற புகழ்பெற்ற 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இயக்கிய Jalamarmaram என்ற மலையாள திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ள கமல்ஹாசன், தேசிய விருது பெற்ற இயக்குனருடன் இணையவுள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

More News

'உத்தம வில்லன்' படத்துடன் கனெக்ஷன் ஆகும் 'தூங்காவனம்'

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'தூங்காவனம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

'வேதாளம்' டப்பிங்கை தொடங்கினார் அஜீத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் கடந்த வாரம் வெளியாகி...

மனோரமாவுக்கு திருஷ்டி கழித்த கமல் மகள்

ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த அதிசய நாயகி மனோரமா நம்மைவிட்டு மறைந்த சோகத்தில் தமிழ் திரையுலகமே மூழ்கியுள்ள நிலையில்...

'மசாலா படம் - சமூக வலைத்தள விமர்சகர்களுக்கு சாட்டையடி

ஒரு படம் வெற்றி பெற வேண்டுமானால் அந்த படத்தின் கதை தற்கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும்....

ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் ராகவா லாரன்ஸ்?

காஞ்சனா 2' என்ற மாபெரும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் இரண்டு படங்களில் நடித்து இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....