குற்றவாளிகள் நாடாளக்கூடாது! டுவிட்டரில் பொங்கிய கமல்

  • IndiaGlitz, [Monday,November 20 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முன்னிலையிலும் சமூக விழிப்புணர்வுகளுக்கான புரட்சிகரமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவருடைய கருத்துக்கள் ஆளும் அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனாகவும், தமிழக மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் தோன்றிவிட்டதையும் காட்டுகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் தனது டுவிட்டரில் ஆவேசமாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்' என்று கூறியுள்ளார்

இந்த டுவிட் புரட்சிகரமாக இருந்தாலும்  வழக்கம் போல் இந்த கருத்தும் பலருக்கும் புரியாமல் உள்ளது. ஒரு அரசாங்கமே திருடுவது என்பது மாநில அரசை குறிக்கின்றதா? மத்திய அரசை குறிக்கின்றதா? குற்றவாளிகள் என்று கமல் யாரை குறிப்பிட்டு சொல்கிறார், போன்ற சந்தேகங்கள் அரசியல் விமர்சகர்களுக்கே எழுந்துள்ளது. இதனை அவர் தெளிவுபடுத்துவார் என்று நம்புவோம்

 

More News

த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பு கொடுத்த மிகப்பெரிய கெளரவம்

நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று: கார்த்தியின் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம்

தமிழ் சினிமாவில் வெளிவந்த மிகச்சிறந்த போலீஸ் படங்களில் ஒன்றாகவும், கார்த்திக்கு வாழ்நாளில் மறக்க முடியாத படமாகவும் விளங்கி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று'

தமிழ் இருக்கைக்கு நிதிதிரட்ட மொய்விருந்து நடத்திய டெக்சாஸ் தமிழர்கள்

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், சீனம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சமஸ்கிருதம் மற்றும் பெர்சியம் ஆகிய 7 மொழிகள் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

நயன்தாராவின் கிளைமாக்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் நேற்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே வாழ்த்து கூறியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' மற்றும் பாகுபலி 2' ஆகிய படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி வசூலில் சாதனை புரிந்தது.