close
Choose your channels

கமல்ஹாசன் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! இசையமைப்பாளரின் மாஸ் அறிவிப்பு..

Wednesday, June 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருடைய ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஜூன் 12-ம் தேதி வெளியாகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பிரபாஸ் நடித்துள்ள ’கல்கி 2898 ஏடி’ என்ற படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கும் நிலையில் இந்த படம் ’இந்தியன் 2’ படத்திற்கு முன்பே அதாவது ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் ’கல்கி 2898 ஏடி’ படத்தின் டிரைலர் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என்று இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து கமல் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். இந்த படத்தின் கமல் காட்சியை பார்க்க அவர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், பசுபதி, அன்னாபென் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படத்தை சுமார் 600 கோடி ரூபாய் செலவில் வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.