கமல்ஹாசன் அடுத்த படத்தின் டீசர் ரெடி.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ மற்றும் ’கல்கி 2898’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில் இவற்றில் ஒரு படத்தின் டீசர் தயாராக இருப்பதாகவும் இந்த டீசரின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ’கல்கி 2898’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ’கல்கி 2898’ என்ற திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ’கல்கி 2898’ படத்தின் டீசர் தயாராகி விட்டதாகவும் இந்த டீசரின் சென்சார் தகவல் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த டீசரின் ரன்னிங் டைம் 1 நிமிடம் 23 வினாடிகள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த டீசர் வரும் பொங்கல் திருநாளில் இணையதளங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கமல் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

'அயலான்' படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு

பிக்பாஸ் ஓட்டுகள்.. 2ஆம் இடத்திற்கு முன்னேறியவர் இவரா? .. கடைசி நேரத்தில் எதுவும் நடக்கலாம்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிறு அன்று முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது டைட்டில் வின்னருக்கான ஓட்டுகள் பதிவாகி கொண்டிருக்கின்றன.  அனைவரும் எதிர்பார்த்தபடியே அர்ச்சனாவுக்கு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர்  'சிஸ்டர்'.. மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் திரைப்படத்திற்கு “சிஸ்டர்” என தலைப்பிடப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது.

மீண்டும் ஒரு மிட்வீக் எலிமினேஷனா? இம்முறை சிக்கும் போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நேற்று திடீரென மிட்வீக் எவிக்சன் நடந்தது என்பதும் அதில்  விஜய் வர்மா எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பதையும் பார்த்தோம்.

விஜய்சேதுபதியின் 'மெர்ரி கிறிஸ்துமஸ்'.. முதல் விமர்சனம் கொடுத்த பிரபல தமிழ் இயக்குனர்..!

விஜய் சேதுபதி நடித்த நேரடி ஹிந்தி திரைப்படமான 'மெர்ரி கிறிஸ்துமஸ்' என்ற படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபல தமிழ் இயக்குனர் தனது பாராட்டுகளை