'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. கமல்ஹாசனின் புதிய டுவீட்
- IndiaGlitz, [Sunday,September 10 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டரில் சமூக கருத்துக்களை தைரியமாக கூறி வரும் நிலையில் அவரது ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது நீட் பிரச்சனை தமிழகம் முழுவதும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று அவர் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அது, 'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. அதன் விதை. பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் TN வணங்குதல் நலம்'. வழக்கம்போல் இந்த டுவீட் பலருக்கும் புரியாமலும், புரிந்த சிலர் ஆச்சரியப்பட்டு கமெண்ட் அளித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் நீட் குறித்து பேசிய கமல், 'கல்வி குறித்து முடிவு செய்யும் உரிமை மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என்றும் எமர்ஜென்ஸிக்கு முன்னர் அப்படித்தான் இருந்தது என்றும், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு இந்த உரிமையை மீண்டும் பெற அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார்.