close
Choose your channels

ரஷ்யாவில் வெளியாக இருக்கும் கமல்ஹாசன் திரைப்படம்.. தேதி அறிவிப்பு..!

Monday, October 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இந்திய திரையுலகின் பிரபல நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ரஷ்யாவில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், ரஷ்ய மொழியில் இதற்காக டப் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் முக்கிய வேடத்திலும், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலரது நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'

இந்த படம் கடந்த ஜூன் மாதம் தமிழ் உள்பட இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியானது என்பதுடன், சில வெளிநாட்டு மொழிகளிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 1200 கோடி ரூபாய் வரை உலகம் முழுவதும் வசூலித்த நிலையில், சமீபத்தில் இந்த படம் ரஷ்யாவில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவினால், தற்போது ரஷ்ய மொழியில் இந்த படம் டப் செய்யப்பட்டு நவம்பர் 1ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள திரையரங்கில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 1200 கோடி வசூல் செய்திருக்கும் 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் இன்னும் பல கோடிகளை கூடுதலாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment