1000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மீண்டும் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஆளவந்தான்’. ரூ.25 கோடி பட்ஜெட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை மீண்டும் டிஜிட்டலில் உருவாக்கி ரீரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் திட்டமிட்டு இருந்தாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ’ஆளவந்தான்’ வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரீ ரிலீஸ் குறித்த விளம்பரம் வெளியாகி உள்ளது. அதில் ’எழிலோடும் பொலிவோடும் விரைவில் உலகம் எங்கும் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளதாக கலைப்புலி எஸ் தாணு அவர்கள் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’வேட்டையாடு விளையாடு’ சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ’ஆளவந்தான்’ படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் '800': இலவசமாக ஓடிடியில்..!

பிரபல இலங்கை சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படம் '800' கடந்த அக்டோபர் 6ஆ, தேதி திரையரங்குகளில் வெளியானது.  மதுர் மிட்டல் என்பவர் முத்தையா முரளிதரன் கேரக்டரில்

'தளபதி 68' ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? விஜய்க்கு என்ன கேரக்டர்?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் 'ஹிஸ்ட்ரி ஆப் வயலன்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் நடித்துவரும் 'தளபதி 68' படமும் ஒரு ஹாலிவுட் ப

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டு காரணமாக வெளியேற்றப்பட்டார்.

அவங்களா வலையில வந்து விழுறாங்க.. விசித்ரா கூறியது யாரை? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலிருந்து இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக வருகிறது. குறிப்பாக மாயா, பூர்ணிமா, ஜோவிகா என்ற கூட்டணி அமைந்த உடன்

நண்பருக்கு ஒரு லட்டு, எதிரிக்கு ஒரு லட்டு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட் டாஸ்க்..!

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் வைக்கப்படுகிறது