close
Choose your channels

ஒரே படத்தில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Tuesday, July 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே படத்தில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள இயக்குனர் எம்டி வாசுதேவன் என்பவர் பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் என்பதும் இவரது இயக்கத்தில் உருவான 9 படங்களின் தொகுப்பை கொண்டு ’மனோரதங்கள்’ என்ற தொடர் உருவாகியுள்ளது.

இந்த தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, பகத் பாசில் உள்ளிட்ட பல திரை உலக நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் இந்த தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இது குறித்து மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ’மனோரதங்கள்’ தொடர ஜீ 5 சேனலில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

சுமார் இரண்டு நிமிடங்கள் உள்ள ’மனோரதங்கள்’ தொடரின் டிரைலர் வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது இந்த தொடரை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment