'விக்ரம்' டிரைலர் ரிலீஸிலும் புதுமை: வேற லெவலில் கமல்ஹாசனின் திட்டம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பதும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கி விட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனை இளமையாக காட்டுவதற்காக DeAging technology என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதற்காக 10 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டதாகவும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்திய முதல் தமிழ்ப்படம் ’விக்ரம்’ என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலே மிரட்டலாக இருக்கும் நிலையில் தற்போது அடுத்ததாக ’விக்ரம்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மே 18ஆம் தேதி கேன்ஸ் 2022 சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படமொன்றின் ட்ரைலர் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகியுள்ள ’விக்ரம்’ படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’விக்ரம்’ படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் பிரம்மாண்டமாக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.