பழம்பெரும் இயக்குனரை கையை பிடித்து தலைகுனிந்து வணங்கிய கமல்ஹாசன்: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பழம்பெரும் இயக்குனரின் கையை பிடித்து தலைகுனிந்து வழங்கிய கமல்ஹாசனின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் பல இயக்குனர் கே விஸ்வநாத் என்பதும் இவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கி இவர் இயக்கிய பல திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த ‘சலங்கை ஒலி’, ’சிப்பிக்குள் முத்து’, ‘பாச வலை’ உள்பட ஒரு சில படங்களை இயக்கி உள்ளார் என்பதும் கமல்ஹாசனுடன் ’குருதிப்புனல்’ ’உத்தமவில்லன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கே விஸ்வநாத் இல்லத்திற்கு இன்று கமல்ஹாசன் சென்று அவரை சந்தித்தார். அவரது கையைப் பிடித்து தலைகுனிந்து வணங்கிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின்போது கே விஸ்வநாத் குடும்பத்தினர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் தனது குருவாக கே பாலச்சந்தர் அவர்களை நினைத்தாலும் கே விஸ்வநாத் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Ulaganayagan @ikamalhaasan met Legendary Director #KViswanath at his home in Hyderabad today. pic.twitter.com/fNUxuty28z
— Diamond Babu (@idiamondbabu) November 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com